Friday, February 25, 2011

"யாருக்காக சிங்காரச் சென்னை?"-ஆவணப்படம்

  http://farm1.static.flickr.com/44/133198810_8e2274bb58_m.jpg

  " யாருக்காக சிங்காரச் சென்னை?" என்னும்  ஆவணப்படத்தை "குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்"  தயாரித்துள்ளது.இந்த ஆவணப்படம்  சென்னையில் வசிக்கும்  குடிசை  வாழ்  மக்களை  மையப்படுத்தி  எடுத்துள்ள  படம்  ஆகும்.வளர்ச்சித் திட்டங்கள் என்னும் பெயரில் மக்களின் வாழ்விடங்களை  தமிழக அரசு  அழித்து வருவதை அந்த பாதிக்கப்பட்ட  மக்களின் உரிமைக் குரலாக  ஒலிக்கிறது இந்த  ஆவணப்படம்.  


The image “http://25.media.tumblr.com/tumblr_kykednZMLo1qas6mfo1_500.jpg” cannot be displayed, because it contains errors.

மேலும் இவர்களுக்கு  மாற்று இடங்கள் என்று  கூறி மனிதர்களுக்கு   எந்தவொரு  
 அடிப்படை  வசதியும்  கிடைக்காத  இடத்தில்  அவர்களை   குடியேற்றுகிறது.அங்கிருந்து அவர்கள் சென்னைக்கு வரவேண்டுமானாலும் ஒருநாளைக்கு சுமார் 40 முதல் 50 ரூபாய் செலவு செய்து வரவேண்டியுள்ளது.ஏனெனில் அவர்களுக்கு பேருந்து வசதியும் இல்லை.அந்த இடத்தில் மருத்துவமனை,பள்ளிக்குடா வசதி முதலானவை கூட மறுக்கப்பட்ட  நிலையில் மக்கள் அங்கு வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள்.  இது  போல  இன்னும்   வரும்   வளர்ச்சித்  திட்டத்தின்  மூலம்   சுமார்  மூன்று லட்ச த்திற்கும் அதிகமான குடிசை  வாழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்க நேரிடும்  என்ற அதிர்ச்சியான தகவலை  தெரிவித்துள்ளது  இந்த ஆவணப்படம்.


இந்த ஆவணப்படம் தேவைப்படுவோர்  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:        


'      குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்-சென்னை
     திரு.இசையரசு-9710653734            திரு.பிரேம்-9094162595

Friday, February 4, 2011

தமிழர்களே கொலைகார ஏர்டெல்லை புறக்கணிப்போம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWoSL2Lfngb6hNNJmjKYXQ7_Sv2YkZO58eGvN1WmCWAzVDPixemZFT8tNXn2IQWo4aidxJAGcnsCEdhLLIwAuPT57ctNLANq5Mp2vX7TrHEO8W5WBY71v2nyTTGU3BAsRDLzsqwI8nOekn/s1600/airtel.jpg

தமிழர்களே  ஈழத் தமிழர்களை அழிக்கத் துணைபோன ஏர்டெல் நிறுவனத்தை  தமிழகத்திலிருந்து  விரட்டுவோம்.தற்பொழுது  நம்மிடம்  இருக்கிற  அலைபேசி எண்ணை வைத்துக்கொண்டு   வேறு  நிறுவனங்களுக்கு  மாறும் வசதியை  தொலைதொடர்பு  நிறுவனம்  ஏற்படுத்தி  தருகிறது  எனவே  தமிழர்களாகிய நாம்  அனைவரும்  ஏர்டெல்லை  புறக்கணிப்போம்
         ஏர்டெல்  நிறுவனத்தின் மோசடிகளை  அறிந்துகொள்ள  மே  பதினேழு  இயக்கத்தின் இணையதளத்தை(http://mayseventeen.comபார்க்கவும்.