மேலும் இவர்களுக்கு மாற்று இடங்கள் என்று கூறி மனிதர்களுக்கு எந்தவொரு
அடிப்படை வசதியும் கிடைக்காத இடத்தில் அவர்களை குடியேற்றுகிறது.அங்கிருந்து அவர்கள் சென்னைக்கு வரவேண்டுமானாலும் ஒருநாளைக்கு சுமார் 40 முதல் 50 ரூபாய் செலவு செய்து வரவேண்டியுள்ளது.ஏனெனில் அவர்களுக்கு பேருந்து வசதியும் இல்லை.அந்த இடத்தில் மருத்துவமனை,பள்ளிக்குடா வசதி முதலானவை கூட மறுக்கப்பட்ட நிலையில் மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது போல இன்னும் வரும் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் சுமார் மூன்று லட்ச த்திற்கும் அதிகமான குடிசை வாழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்க நேரிடும் என்ற அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது இந்த ஆவணப்படம்.
இந்த ஆவணப்படம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
' குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்-சென்னை
திரு.இசையரசு-9710653734 திரு.பிரேம்-9094162595

